இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்வரைதான் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என சொல்லப்படுகிறது. அவருக்கு பின்னர் இந்திய அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.
இதுபற்றி பிசிசிஐ தரப்பில் இருந்து கசிந்துள்ள தகவலின் படி, இப்போதே அடுத்த கேப்டன் பற்றி சிந்திக்க தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அதன்படி ரோஹித் ஷர்மாவுக்கு அடுத்த இடத்தில் ஹர்திக் பாண்ட்யாதான் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.