கேல் ரத்னாவிற்கு தகுதியற்றவரா ஹர்பஜன்? நிராகரிப்பின் காரணம் என்ன??

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (08:42 IST)
கேல் ரத்னா விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கின் பெயர் நிராகரிப்பட்டுள்ளதால் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
விளையாட்டு துறையில் சிறந்து விலங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கேல் ரத்னா. 1991 ஆம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
 
பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதிற்காக ஹர்பஜன் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், பரிந்துரைக்கான ஆவணங்கள் தாமதமாக வந்தடைந்ததாக கூறி ஹர்பஜனின் பெயர் நிராகரிப்படுகிறது என மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இது குறித்து ஹர்பஜன் கூறியதாவது, ஆவணங்கள் தாமதமாக வந்தடைந்ததாக என் பெயர் நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிந்துக்கொண்டேன். ஆனால், மார்ச் 20 ஆம் தேதியே என்னுடைய ஆவணங்களை நான் சமர்பித்துவிட்டேன். 
 
10 - 15 நாட்களில் டெல்லிக்கு சென்றிருக்க வேண்டிய ஆவணங்கள் உரிய நேரத்தில் செல்லவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என தெரிய பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராணா குர்மித் சிங் தலையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 
 
இது வரை இந்த விருதுகளை விஸ்வநாதன் ஆனந்த், சச்சின், தோனி, கோலி ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்