உண்மையில் நமக்கு 2-0 வெற்றி… ஹனுமா விஹாரி பெருமிதம்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (13:22 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது குறித்து ஹனுமா விஹாரி பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. முதல் டெஸ்ட்டான அடிலெய்ட் தோல்விக்கு பின்னர்  மீண்டு வந்து தொடரை வென்றிருப்பது உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள ஹனுமா விஹாரி ‘அடிலெய்ட் டெஸ்ட்டில் அடைந்த மோசமான தோல்விக்குப் பின்னர் நாங்கள் ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டு இருக்கவில்லை. ஒற்றுமையாக இருந்தோம். இனிமேல் நமக்கு இது 3 போட்டிகளைக் கொண்ட தொடர். அதை வெல்வோம் என நினைத்தோம். அதை செய்தும் காட்டியுள்ளோம்.  மேட்ச் சீரிசை நாங்கள் 2-0 என்று கைப்பற்றியுள்ளோம். ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்