நம்ப முடியாத இன்னிங்ஸ் ஆடிய மேக்ஸ்வெல்… ஆஸி அணி அரையிறுதியில்!

புதன், 8 நவம்பர் 2023 (06:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று மும்பையில் நடந்த போட்டி, இந்த உலகக் கோப்பையின் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 291 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து கிட்டத்தட்ட தோல்வி என்ற நிலைக்கு சென்றது. அப்போது ஆஸி அணிக்கு ஒரே நம்பிக்கையாக இருந்தது மேக்ஸ்வெல் மட்டும்தான்.

அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் மேக்ஸ்வெல் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை ஆடியுள்ளார். 128 பந்துகளில் 201 ரன்கள் சேர்த்து ஆஸி அணியை வெற்றி பெறவைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆஸி அணி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்