இந்நிலையில் இப்போது இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகார் தவானுக்குப் பதில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள கௌதம் கம்பீர் “ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் அடிப்பது எளிதானது இல்லை. அதுவும் 35 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்தார் இஷான் கிஷான். அவர் நிதானமாக விளையாடவும் கூடியவர். அதனால் கண்டிப்பாக ரோஹித் ஷர்மாவோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.