கோலி அப்படி ஒரு முடிவெடுப்பார்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல… மனம் திறந்த கங்குலி!

செவ்வாய், 13 ஜூன் 2023 (14:26 IST)
கடந்த ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டி 20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். பின்னர் அவர் ஒரு நாள் அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து மோதல்கள் உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டன. மேலும் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நிர்பந்திக்கப்பட்டு விலகியதாகவும் கங்குலி மேல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடைசியில் டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக இருந்த கோலி 2022 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகு அந்த பொறுப்பையும் துறுந்தர். அதன்பிறகுதான் இந்திய அணிக்கு அனைத்து வடிவிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ரோஹித் ஷர்மா.

கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பற்றி பேசியுள்ள கங்குலி “கோலி டெஸ்ட் கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவர் அப்படி அறிவித்ததும் உடனடியாக அடுத்த சாய்ஸாக எங்களுக்கு இருந்தவர் ரோஹித் ஷர்மாதான். அதனால் அவரை மூன்று பார்மட்களுக்குமான கேப்டனாக ஆக்கினோம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்