இந்த கண்டீஷனுக்கு ஒத்துகிட்டாதான் நான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பேன்… கம்பீர் கறார்!

vinoth

திங்கள், 27 மே 2024 (07:32 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார்.  ஆனால் அவர் தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வந்த அவர் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் இறுதியோடு முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதில் கவுதம் கம்பீரின் பெயரும் அடிபடுகிறது. இதுபற்றி தற்போது பேசியுள்ள கவுதம் கம்பீர் “எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி கண்டிப்பாக வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டால் மட்டும்தான் நான் அந்த பொறுப்புக்கு விண்ணபிப்பேன்” எனக் கறாராகக் கூறியுள்ளார். கம்பீர் தவிர ஸ்டீபன் பிளமிங்கும் பிசிசிஐயின் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றுதான் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கக் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்