இந்திய அணி நேற்றைய போட்டியில் தோற்றதற்கான ஐந்து காரணங்கள்!

Webdunia
திங்கள், 20 நவம்பர் 2023 (08:00 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து இலக்கை எட்டி ஆறாவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை சூட்டிக்கொண்டுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் எதிர்பாராத தோல்விக்கு சில காரணங்களைப் பார்ப்போம்.

பொறுப்பற்ற தொடக்க வீரர்கள்

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவருமே இந்த போட்டியில் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடவில்லை. ஷுப்மன் கில் 4 ரன்களில் அவுட் ஆன பின்னராவது ரோஹித் ஷர்மா, தன்னுடைய அதிரடி ஆட்டத்தை நிறுத்தி கோலியோடு நிதானமாக ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் ரோஹித் ஷர்மா முட்டாள்தனமான ஷாட் ஒன்றை ஆடி தன் விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

எதிர்பாராத கோலியின் விக்கெட்

முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட் இழந்த நிலையில் ஆட்டத்தின் முழு பாரமும் கோலியின் தோளில் விழுந்தது. அவரும் அதை உணர்ந்து நிதானமாக விளையாடி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தன் விக்கெட்டை இழக்க, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நிலை குலைந்தது. அதன் பின்னர் வந்த வீரர்கள் பதட்டத்தோடு விளையாடி விக்கெட்டை இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் புள்ளிவிவர திட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு அந்த அணியின் சப்போர்ட் ஊழியர்கள் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் வீக்னெஸ் பற்றி கடந்த 50 போட்டிகளில் அவர்கள் அவுட் ஆன பந்துகள், அவர்கள் தடுமாறிய பந்துகள் என ஒரு புள்ளி  விவரமே கொடுக்கப்பட்டு, அதற்கேற்றார் போல அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றியதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்திய அணியிடம் இப்படி எதுவும் திட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

இரண்டாம் பாதியில் நடந்த மாற்றம்

இரண்டாம் இன்னிங்ஸில் பந்து மின்வெளிச்சத்தில் சில மாற்றங்களை சந்தித்தது என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். அதுவும் இந்திய பவுலர்களுக்கு தாங்கள் நினைத்தது போல பந்து வீச முடியாததற்கு ஒரு காரணமாக அமைந்தது.

இந்திய அணியின் வழக்கமான பதற்றம்

வழக்கமாக லீக் போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், நாக் அவுட் போட்டிகளில் பதற்றமடைந்து சொதப்பி விடும். கடந்த 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த சோகம் நேற்றைய போட்டியில் தொடர்ந்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்