கோலி அதை செய்யும்வரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்… ரசிகர் எடுத்த சபதம்!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:26 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக  சர்வதேசக் கிரிக்கெட்டில் சதம் அடிக்கவில்லை.

இந்தியாவின் கோலி கிரிக்கெட் விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ரன் மெஷின் என வர்ணிக்கப்படும் அளவுக்கு ரன்களைக் குவித்து வந்தார். ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் 50 ரன்களுக்கு ஆவ்ரேஜ் வைத்திருக்கும் இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே வீரர் அவர்தான்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் முழுமையான ஆட்டத்திறனில் இல்லை. இரண்டு ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இதுவரை 70 சதங்களை விளாசியுள்ள அவர் 71 ஆவது சதத்தை எப்போது அடிக்க போகிறார் என்ற ஏக்கம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் இதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மொஹாலியில் நடந்த அவரின் 100 ஆவது போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 45 ரன்களில் அவ்ட் ஆகி ஏமாற்றமளித்தார்.

இந்நிலையில் மைதானத்தில் போட்டியைப் பார்க்க வந்திருந்த இளைஞர் ஒருவர் வைத்திருந்த பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதாகையில் ‘கோலி தனது 71 ஆவது சதத்தை அடிக்கும் வரை நான் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என எழுதியுள்ளார். அவரின் போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்