சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், அதன் பின்னர் நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இருந்தது. ஆனால் அந்த போட்டி கூட ஒரு தலைபட்சமாக உப்புச்சப்பில்லாமல் இந்தியாவின் ஆதிக்கத்தோடுதான் நடந்து முடிந்தது. பல முன்னாள் வீரர்கள் இந்தியாவுக்கு சமமான வலுவான அணியாகப் பாகிஸ்தான் இல்லை எனக் கருத்து தெரிவித்தனர்.