முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. 69 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் கருண் நாயர் மட்டுமே அரைசதம் அடித்து, 57 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களின் பங்களிப்பு சொற்பமாகவே இருந்தது. குறிப்பாக, கடைசி மூன்று பேட்ஸ்மேன்களான ஆகாஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. 14 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 43 ரன்களுடனும், கேப்டன் போப் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இந்தியாவை விட 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.