ஷிவம் துபே தேவையில்லாத ஆணி… என்ன முன்னாள் சி எஸ் கே வீரரே இப்படி சொல்லிட்டாரு?

vinoth

செவ்வாய், 11 ஜூன் 2024 (12:53 IST)
நடந்து வரும் உலகக் கோப்பை தொடர் பவுலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போலவும், பேட்ஸ்மேன்களுக்கு போர்க்களத்தில் நிற்பது போலவும் அமைந்துள்ளது. ஐபிஎல் பொன்ற பேட்டிங்குக்கு சாதகமான தொடரில் விளையாடிவிட்டு வந்த வீரர்களுக்கு பல அதிர்ச்சிகளைக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியில் ஷிவம் துபே எடுக்கப்பட்டு அவர் இரண்டு போட்டிகளிலும் பெரிதாக ஜொலிக்காத நிலையில் அவரின் இடம் குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் இறக்கலாம் என சொல்லி வருகின்றனர்.

இதே கருத்தை முன்னாள் சி எஸ் கே வீரரான அம்பாத்தி ராயுடுவும் கூறியுள்ளார். அதில் “நான் இந்திய அணியில் ஷிவம் துபேக்கு பதில் சஞ்சு சாம்சனையே தேர்வு செய்ய விரும்புவேன்.” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்