முதல் நாளில் இங்கிலாந்து நிதான ஆட்டம்… சதத்தை நெருங்கிய ரூட்!

vinoth

வெள்ளி, 11 ஜூலை 2025 (07:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.

அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாளில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. முதல் நாள் முடிவில் நான்கு விக்கெட்களை இழந்து 251 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 99 ரன்களோடு ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவரோடு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களோடு களத்தில் உள்ளார்.

இந்தியா சார்பில் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும், நிதிஷ்குமார் ரெட்டி இரண்டு விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்