விஜய் ஹசாரே தொடர்… தமிழக அணிக்குக் கேப்டனான தினேஷ் கார்த்திக் நியமனம்!

வெள்ளி, 10 நவம்பர் 2023 (13:57 IST)
இந்திய அணியில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக இடம் கிடைக்காமல் போராடி அவ்வப்போது இடங்களை பெறுபவர் தினேஷ் கார்த்திக். ஆனாலும் அவருக்கான இடம் கிடைத்தாலும் அதை தொடர்ச்சியாக சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சொதப்பித் தள்ளுவார்.

கடந்த ஆண்டு நடந்த டி 20 போட்டியில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போதும், ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாமல் ஏமாற்றினார். அதன் பின்னர் அவர் அணியில் எடுக்கப்படவில்லை.

இப்போது வர்ணனையாளராக பணியாற்றி வரும் தினேஷ் கார்த்திக், விஜய ஹசாரே தொடரில் தமிழக அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  38 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடர் இந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழக அணி ஐந்து முறை விஜய் ஹசாரே கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்