9 விக்கெட்டுக்களை இழந்த மே.இ.தீவுகள்.. வெற்றியின் விளிம்பில் இந்தியா..!

Mahendran

திங்கள், 13 அக்டோபர் 2025 (14:32 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் டெல்லி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளைம்பில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ-ஆன் ஆனது.
 
அதன் பிறகு இரண்டாவது இன்னிங்சில் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ள நிலையில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட வெறும் 79 ரன்கள் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் அணி எடுத்துள்ளது.
 
இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே மேற்கிந்திய தீவுகள் கைவசம் இருக்கும் நிலையில், அதிகபட்சம் இந்தியாவுக்கு 100 ரன்கள் இலக்காக இருக்கும் என்றும், இந்திய அணி இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்றும் வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்