இந்நிலையில் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஷிகார் தவான் குறித்து பேசும்போது “இந்தியாவுக்காக தவான் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் இப்போது தொடக்க ஆட்டக்காரரான தேர்வுக்கு ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் உள்ளனர்” என தெளிவாகக் கூறியுள்ளார். அதனால் இனிமேல் தவானுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு நிலை என்பது தெளிவாகியுள்ளது.