“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

vinoth

புதன், 22 மே 2024 (17:51 IST)
சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது. உடனடியாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இங்கிலாந்துக்கு அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தோனி சமூக ஊடகங்கள் குறித்து பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ஏன் அவர் சமூக ஊடகங்களில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற கேள்விக்கு “ டிவிட்டரில் (எக்ஸ்) எந்த ஒரு நல்லதும் நடந்ததில்லை. அங்கே ஒரு விஷயத்தை பதிவிட்டால், அதை திரித்து சர்ச்சை ஆக்கிவிடுகிறார்கள். அதனால் நான் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் அல்லது புகைப்படங்களை பதிவிடுவதையே விரும்புகிறேன்.  அதன் மூலமாக நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்