ஐபிஎல் தவிர்த்து மற்ற நேரங்களில் விவசாயம், நண்பர்களோடு சுற்றுப்பயணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அதில் “இந்திய அணியில் உங்களோடு நீண்ட நாட்கள் விளையாடிய கோலியோடு இப்போது உங்கள் நட்பு எப்படி உள்ளது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் கோலியோடு நீண்ட ஆண்டுகள் சேர்ந்து விளையாடினேன். இப்போது நாங்கள் அதிகமாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் சந்தித்து நடப்பு விஷயங்கள் பற்றி உரையாடுவோம்” எனக் கூறியுள்ளார்.