இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனி கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார். அதில் “நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட்டை ரசித்து விளையாட விரும்புகிறேன். அதை என்னால் செய்ய முடியும் என ரசிகர்கள் அறிவார்கள். நாட்டுக்காகக் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதனால் கிரிக்கெட்டுக்குதான் என் முன்னுரிமை.” எனக் கூறியுள்ளார். இதனால் இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.