கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்… பெண்களுக்கு தோனி அட்வைஸ்!

vinoth

வியாழன், 31 ஜூலை 2025 (13:53 IST)
இந்தியக் கிரிக்கெட்டில் தோனி படைக்காத சாதனைகளை விரல்களை விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு சிறப்பான சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்தியாவுக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றை எழுதினால் அதில் தோனிக்கு தனியிடம் ஒதுக்கப்படும்.

தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விவசாயம், பைக் சவாரி என மத்திய வயது வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்ட தோனி பேசும்போது திருமணமான பெண்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

அதில் “உலகக் கோப்பை வென்றாலும் இல்லாவிட்டாலும் எல்லாக் கணவர்களும் ஒன்றுதான். உங்கள் கணவர் கோபமாக இருந்தால் 5 நிமிடம் எதுவும் பேசாதீர்கள்.  அதன் பிறகு நாங்களே அமைதியாகிவிடுவோம்.  எங்களுடைய ஆற்றல் எங்களுக்குத் தெரியும்” எனக் கூற திருமணத்துக்கு சிரிப்பு சத்தம் அரங்கை நிறைத்தது. உடனே தோனி “இந்த நகைச்சுவைக்கு ஆண்கள் அதிகமாக சிரிக்கிறார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” எனப் பேசிமுடித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்