ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை அஸ்வின் 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சிஎஸ் கே அணிக்காக விளையாடினார். அந்த காலகட்டத்தில் சிஎஸ்கே இரண்டு முறை கோப்பை வென்றது. ஆனால் அதன் பின்னர் அவர் பல அணிகளுக்காக மாறி மாறி விளையாடி வருகிறார். தற்போது ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவரை இந்த ஆண்டு அந்த அணி விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விடுவிக்கும் பட்சத்தில் அவரை மீண்டும் சி எஸ் கே அணியில் எடுக்க அணி நிர்வாகம் ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. தன்னுடைய கிரிக்கெட் வாழ்வின் இறுதிகாலத்தில் இருக்கும் அஸ்வினை மீண்டும் சென்னை அணியில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.