அந்த அணியின் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்களும், ஷுப்மன் கில் 55 பந்துகளில் 104 ரன்களும் சேர்த்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இந்த இமாலய இலக்கை துரத்தி ஆடவந்த சி எஸ் கே அணி முதல் மூன்று ஓவர்களுக்குள்ளாகவே 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த டேரில் மிட்செல் மற்றும் மொயின் அலி ஆகியோர் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்த வண்ணம் இருந்ததால் தேவைப்படும் ரன்ரேட் எகிறிக்கொண்டே சென்றது. இதனால் சி எஸ் கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 196 ரன்கள் மட்டுமே சேர்ந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.