பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

Prasanth Karthick
வியாழன், 23 மே 2024 (09:12 IST)
நேற்றைய ப்ளே ஆப் போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்த நிலையில் அதுகுறித்து சிஎஸ்கே ரசிகர்கள் ட்ரோல் செய்வது ஒருபுறம் இருக்க சிஎஸ்கேவின் முன்னாள் வீரர்களும் கிண்டல் செய்து வருவது வைரலாகியுள்ளது.



சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேற்று நடந்த குவாலிபயர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதனால் ஆர்சிபியின் கோப்பை கனவு இந்த ஆண்டும் வெறும் கனவாகவே முடிந்துள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ஆர்சிபியின் தோல்வி குறித்து ட்ரோல் மீம்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிஎஸ்கேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஆர்சிபியை கலாய்த்து வருகின்றனர்.

ALSO READ: ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

ஆர்சிபி அணியின் தோல்வி குறித்து பேசிய அம்பத்தி ராயுடு “கொண்டாட்டங்களாலும், ஆக்ரோஷத்தினாலும் ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முடியாது. சிஎஸ்கே அணியை வீழ்த்தி விடுவதால் மட்டும் ஐபிஎல் கோப்பையை அளிக்க மாட்டார்கள். ப்ளே ஆப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்” என கூறியுள்ளார். லீக் போட்டிகளில் சிஎஸ்கேவை வீழ்த்தி ப்ளே ஆப் சென்றபோது கோப்பையையே வென்றது போல ஆர்சிபி வீரர்கள் கொண்டாடிக் கொண்டிருந்ததை அம்பத்தி ராயுடு நாசுக்காக விமர்சித்துள்ளார்.

அதுபோல முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிரிக்கெட் தொகுப்பாளருமான பத்ரிநாத், ‘இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே’ என்ற சந்தானம் காமெடி மீமை பகிர்ந்து ஒருபக்கம் ட்ரோல் செய்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்