வழக்கம்போல டாஸ் வெல்லாத ருதுராஜ்.. பஞ்சாப் பவுலிங்! – ப்ளேயிங் 11 விவரம்!

Prasanth Karthick

ஞாயிறு, 5 மே 2024 (15:20 IST)
ஐபிஎல் சீசனின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.



இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் வென்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 10 போட்டிகளில் 4ல் வென்று 8 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இன்றைய போட்டியில் அதற்கு சிஎஸ்கே பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் வெல்லவே மாட்டார் என்னும் துரதிஷ்டம் இந்த லீக் போட்டியிலும் தொடர்கதையாகியுள்ளது.

ALSO READ: ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணியில் யாரும் கேப்டனாக ஏற்கவில்லை: இர்பான் பதான்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கிய ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி, மிட்செல் சாண்ட்னர், ஷர்துல் தாகுர், துஷார் தேஸ்பாண்டே, ரிச்சர்ட் க்ளீசன்

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டோ, ரிலி ரஸ்ஸோ, சாம் கரண், சஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, அஷுதோஷ் சர்மா, ஹர்ப்ரித் ப்ரார், ஹர்ஷல் படேல், ராகுல் சஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்