பஞ்சாப் கிங்ஸ் பங்குகளை விற்க திட்டமிட்ட சக உரிமையாளர்!? - நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (06:23 IST)

ஐபிஎல் சீசன்களில் பிரபலமான அணியான பஞ்சாப் கிங்ஸ் அணியின் பங்குகளை முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான மோகித் பர்மன் விற்க முயன்றதாக ப்ரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தை நாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போது ஐபிஎல் சீசன்களில் 10 அணிகள் போட்டியிட்டு வருகின்றன. இதில் ஐபிஎல் சீசன் தொடங்கியது முதலாக இருந்து வரும் அணிகளில் ஒன்று பஞ்சாப் கிங்ஸ். இதன் உரிமையாளர்களாக மோகித் பர்மன், ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா மற்றும் கரண் பால் ஆகியோர் உள்ளனர். இதில் அணியின் 48 சதவீத பெருவாரி பங்குகள் மோகித் பர்மனிடம் உள்ளன.

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு முன்னதாக மெகா ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் வீரர்கள் தேர்வு குறித்து பஞ்சாப் அணி நிர்வாகத்தில் தீவிர விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ள மோகித் பர்மன், கணிசமான பங்குகளை விற்க திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனை எதிர்த்து ப்ரீத்தி ஜிந்தா தரப்பில் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மோகித் பர்மன் பஞ்சாப் அணியின் பங்குகளை விற்க தடை கோரப்பட்டுள்ளது. ஆனால் எந்த பங்குகளையும் விற்கும் எண்ணம் தனக்கில்லை என மோகித் பர்மன் கூறியுள்ளார். மெகா ஏலம் நடக்க உள்ள நிலையில் இந்த சம்பவத்தால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்