கோலியை அடுத்து ரோஹித் ஷர்மாவுக்கும் கேலி சித்திரம் வெளியிட்ட ஆஸி ஊடகம்!

vinoth

திங்கள், 30 டிசம்பர் 2024 (09:01 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்த போட்டியில் கோன்ஸ்டாஸ் பேட் செய்துகொண்டிருந்த போது ஓவர்களுக்கு இடையில் கோலி நடக்கும் போது கோன்ஸ்டாண்டின் தோளில் உரசினார். இதையடுத்து இருவரும் முறைத்துப் பார்த்துக் கொண்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் கோலிக்குப் போட்டியின் ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வெஸ்ட் ஆஸ்திரேலியா என்ற ஊடகம் கோலியை ‘கோமாளி’ என வர்ணித்து செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் இப்போது கேப்டன் ரோஹித் ஷர்மா “அழும் பிள்ளை” என விமர்சித்து செய்தி வெளியிட்டது. நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து மூன்று கேட்ச்களை விட்ட போது கேப்டன் ரோஹித் ஷர்மா அவரைக் கடுமையாக திட்டினார். இதையடுத்து அவரை “captain cry baby’ என சித்தரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்