அயர்லாந்துடன் இன்று இரண்டாவது டி 20 போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (09:22 IST)
பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி நேற்று டப்ளின் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணி  6.5 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்து 2 விக்கெட்களை இழந்து ஆடிக்கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு இரண்டாவது டி 20 போட்டி முதல் போட்டி நடந்த டப்ளின் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்