அயர்லாந்துக்கு எதிரான 2 ஆவது டி 20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (06:51 IST)
பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி டப்ளின் நகரில் நடந்த நிலையில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வென்றது.

இதையடுத்து நேற்று இரண்டாவது டி 20 போட்டி அதே டப்ளின் நகரில் நடக்க முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ருத்துராஜ் (58), சஞ்சு சாம்சன் (40), ரிங்கு சிங் (38) என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து 186 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் மட்டுமே சேர்த்து போட்டியை 33 ரன்கள் வித்தியாசத்தில் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்