அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

vinoth

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (13:39 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் பெரிய இன்னிங்ஸ்களை கட்டமைக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கருண் நாயர் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.  முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் சேர்த்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர் ஜடேஜா விக்கெட் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து அவர் பெவிலியன் திரும்பியபோது அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் காரசாரமாக வாக்குவாதம் நடத்தினார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் பரவி கவனம் ஈர்த்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்