அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (09:50 IST)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இரண்டாவது முறையகக் கோப்பை வென்றது. ஆனால் கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் விட்டது. இதையடுத்து அஜிங்க்யே ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த ஆண்டு சீசனில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.

அதனால் இப்போது அந்த அணிக்கு ஒரு கேப்டன் தேவையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் கே எல் ராகுலை 25 கோடி ரூபாய் கொடுத்து ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இப்போது தங்களிடம் இருக்கும் வெங்கடேஷ் ஐயரை டெல்லி அணிக்குக் கொடுத்துவிட்டு கே எல் ராகுலை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.வெங்கடேஷ் ஐயர் கே கே ஆர் அணியால் சுமார் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்