சாப்பாடா இது? நல்லாவே இல்ல..! – ஆஸ்திரேலியாவில் இந்திய வீரர்கள் அவதி!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (09:42 IST)
உலகக்கோப்பை டி20 போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி உணவு சரியில்லை என புகார் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்

உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. இந்த போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி அங்கு பல நாட்டு அணிகளுடனும் மோதி வருகிறது. கடந்த 23ம் தேதி பாகிஸ்தானுடன் மோதிய இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது.

ALSO READ: மீண்டும் மீண்டும் ஒரே தவறு… பாபர் அசாமின் கேப்டன்சிக்கு கடும் கண்டனம்!

இந்நிலையில் நாளை இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதும் டி20 போட்டி ஆஸ்திரேலியாவின் எஸ்சிஜி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணி வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என பிசிசிஐ, ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.

சிட்னியில் நடந்த பயிற்சி அமர்வுக்கு பிறகு இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குளிர்ச்சியாக இருந்ததாகவும், உண்ண தகுந்ததாக இல்லை என்றும் இந்திய வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதவிர அவர்களுக்கு அன்றாட உணவாக சாண்ட்விச் தரப்படுவதும் சர்ச்சையாகியுள்ளது. இந்திய வீரர்களுக்கு சரியான உணவை அளிக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிசிசிஐ கூறியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்