பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று தேர்வு!

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:14 IST)
பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி இன்று செயற்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதை இன்று உறுதி செய்து பிசிசிஐ செயற்குழு உறுப்பினர்கள் ரோஜர் பின்னியை தலைவராக தேர்வு செய்துள்ளனர். பிசிசிஐ செயலாளராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கங்குலி மட்டும் கழட்டிவிடப்பட்டது அரசியல் காரணமாக இருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்