பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

vinoth

புதன், 3 ஜூலை 2024 (07:10 IST)
இந்திய அணியில் ஒரு காலத்தில் வீரர்கள் மோசமான உடல் தகுதியோடு இருப்பார்கள். அசாத்தியமான கேட்ச்களை பிடிப்பது, பவுண்டரிக்கு செல்லும் பந்தை ஓடித்தடுப்பது போன்றவை எல்லாம் மற்ற அணிகளை விட மந்தமாக இருக்கும். வீரர்களும் அடிக்கடி காயமடைவார்கள். ஆனால் தோனி மற்றும் கோலி ஆகியோரின் வருகைக்குப் பிறகு இந்த நிலை முற்றிலும் மாறியது.

கோலி கேப்டன் ஆனதும் அவர் வீரர்களின் பிட்னஸில் கூடுதல் அக்கறைக் காட்டினார். இந்நிலையில்தான் பிசிசிஐ அணித் தேர்வுக்காக யோ யோ டெஸ்ட் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில் தேர்வாகும் வீரர்கள்தான் அணிக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற சூழல் நிலவியது. ஆனால் இந்த டெஸ்ட் குறித்து கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில் இப்போது இந்த டெஸ்ட்டை நீக்கிவிடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு பதிலாக வேறு சில தேர்வுகளை வைத்து வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக வரவிருக்கும் கம்பீர் கூட இந்த தேர்வுமுறைக்கு எதிராகப் பேசியிருந்தார். அதில் “வீரர்கள் திறமை, அவர்களின் பேட்டிங் செயல்பாடு மற்றும் பவுலிங் செயல்பாடு ஆகியவற்றை வைத்து மட்டும்தான் தேர்வு செய்யப்படவேண்டும். யோ யோ டெஸ்ட் முடிவுகளை வைத்தல்ல” எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக இந்திய அணி வீரர்கள் யோ யோ டெஸ்ட் முடிவுகளின் படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்