ஆஸ்திரேலியா மட்டும் இறுதிப் போட்டிக்கு வரக் கூடாது… இந்திய முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் சொல்லும் காரணம்!

vinoth

புதன், 5 ஜூன் 2024 (07:32 IST)
டி 20 உலகக் கோப்பை தொடர் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த எந்த வொரு போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை. அதற்குக் காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளின் மைதானங்கள் பவுலிங்குக்கு ஏற்றவை என்பதுதான் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி இன்று அயர்லாந்தை எதிர்த்து தங்கள் போட்டியை விளையாட உள்ளது.இந்த உலகக் கோப்பை தொடருக்கு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணி முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என ஆருடம் கூறியுள்ளார்.

இது பற்றி பேசியுள்ள அவர் “இந்திய அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கண்டிப்பாக செல்லும். பாகிஸ்தான் அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா அணி மட்டும் வரக் கூடாது. அவர்கள் வந்தால் இந்திய அணிக்கு அது மோசமானதாக அமையும். 2003, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 உலகக் கோப்ப என அது தொடரும்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்