வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வந்த நிலையில் அதை 3-2 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்த தொடர் தோல்வியின் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் இந்திய அணி ஒரு தொடரை இழந்துள்ளது.
அவருக்கு பதிலளிக்கும் விதமாக தன்னுடைய யுட்யூப் பக்கத்தில் பேசியுள்ள இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் “இந்திய அணியை விமர்சிப்பது மிகவும் எளிதானதாகும். ஆனால் இந்த தொடரில் நேர்மறையான அம்சங்களும் கிடைத்துள்ளன. இளம் வீரராக முதல்முறை வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் போது நிறைய சவால்கள் உள்ளன. வெளிநாட்டில் எப்போதுமே நமக்கு தெரியாத சில ரகசியங்கள் இருக்கும். இந்த தொடரில் விளையாடிய இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.