அர்ஷத் நதீமுக்கு எருமை மாட்டை பரிசளித்த மாமனார்… அதுக்கு இதுதான் காரணமாம்!

vinoth

திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (16:02 IST)
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவு இறுதிப் போட்டி சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கத்தையும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலம் தனிநபர் பிரிவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வெல்லும் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஷத் நதீம். அதுமட்டுமில்லாமல் தனிநபர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் பாகிஸ்தானியரும் இவர்தான்.

இந்த ஒலிம்பிக் தொடரில் பாகிஸ்தான் வென்ற ஒரே பதக்கமாக அர்ஷத்தின் தங்கம் அமைந்துள்ளது. இதையடுத்து அவர் பாகிஸ்தானில் ஹீரோவாக மாறியுள்ளார். அவருக்கு பாகிஸ்தான் அரசும் பல்வேறு தனியார் அமைப்புகளும் கோடிக்கணக்கான ரூபாய் பரிசை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அர்ஷத்தின் மாமனார் அவருக்கு ஒரு எருமை மாட்டை பரிசாக வழங்கியுள்ளார். அர்ஷத் பிறந்த பஞ்சாப் மாநிலத்தில் ஒருவருக்கு எருமையைப் பரிசளிப்பது என்பது செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பதற்கான அடையாளமாம். அதனால்தான் தனது மருமகனுக்கு எருமையைப் பரிசாக அளித்துள்ளதாக அர்ஷத்தின் மாமனார் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்