16 வயதுக்குட்பட்ட மண்டல அணிக்களுக்கு இடையேயான உள்ளூர் தொடரில் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனுக்கு இடம் கிடைத்துள்ளது.
வருகின்ற 24 ஆம் தேதி முதல் ஜூன் 6 வரை, தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மண்டல அணிக்களுக்கு இடையேயான உள்ளூர் தொடர் கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளியில் நடைபெற உள்ளது. இதற்கான மேற்கு மண்டல 16 வயதிற்குட்பட்டோருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில், இதில், மேற்குமண்டல அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு இடம் கிடைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை பரோடா கிரிக்கெட் சங்கச் செயலாளர் ராஜேஷ் பாரிக் அறிவித்தார்.
இடதுகை வேகப்பந்து வீச்சாளராகவும், பேட்ஸ்மேனாகவும் அர்ஜூன் உள்ளார். கடந்த ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமிடம் அர்ஜூன் பயிற்சி பெற்றார்.
மேலும், கடந்த ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரின்போது இங்கிலாந்து வீரர்களுக்கு அர்ஜூன் பந்துவீசியதும் குறிப்பிடத்தக்கது.