திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

vinoth

செவ்வாய், 20 மே 2025 (10:32 IST)
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கிரிக்கெட் உலகில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருவது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு முடிவுதான். 36 வயதாகும் அவர் கடந்த வாரம் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் கோலியால் இன்னும் நான்கு ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்க முடியும். தற்போது டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி ஓய்வு பெற்று விட்டதால் கோலியால் தன்னுடைய குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட முடியும்.

இந்நிலையில் விராட் கோலியின் மனைவியும் நடிகருமான அனுஷ்கா ஷர்மாவின் நேர்காணல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் “எங்களுக்கு திருமணமான முதல் 6 மாதங்களில் நாங்கள் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம். நான் உண்மையாகவே அந்த நாட்களை எண்ணிவைத்திருந்தேன்.  நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதை மக்கள் விடுமுறை காலம் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்