34 வயதில் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்!
சனி, 5 ஆகஸ்ட் 2023 (07:21 IST)
இங்கிலாந்து அணியின் லிமிடட் ஓவர் கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டக்காரரான அலெக்ஸ் ஹேல்ஸ் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக இவர் 11 டெஸ்ட், 70 ஒருநாள் போட்டிகள் மற்றும் 75 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்ற போட்டியில் அணியின் ஒரு அங்கமாக இருந்தார்.
தற்போது 34 வயதாகும் இவர் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.