பெங்களூருவில் நாளை இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் டோட்டி நாளை தொடங்குகிறது.
ஐசிசி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து, அந்த அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் விளையாட திட்டமிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் ஜூன் 14ம் தேதி பெங்களூருவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.