60 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்ட 85 வயது பவுலர்!

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:34 IST)
7,000 விக்கெட்டுகளை வீழ்த்திய 85 வயது  வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
வெஸ்ட் இண்டீஸ் ஜமைக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் செசில் ரைட் 1959 ஆம் ஆண்டு இங்கிலாந்து லான்கா ஷையர் லீக் போட்டியில் விளையாடுவதற்காக சென்று அங்கேயே தங்கி தனது கிரிக்கெட் வாழக்கையை தொடர முடிவு செய்தார். 
 
அதன்படி 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி இதுவரை 7,000 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது இவருக்கு 85 வயதாகும் நிலையில் அடுத்த மாதம் 7 ஆம் தேதி நடைபெறும் ஸ்பிரிங்ஹெட் அணிக்கு எதிரான போட்டியோடு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
இது குறித்து அவர் கூறியதாவது, கயம் இல்லாமல் உடல் தகுதியை சரியாக கவனித்துக்கொண்டதுதான் இவ்வளவு நாள் கிரிக்கெட் விளையாடி வருவதற்கு காரணம். அதிகமாக மது குடிக்க மாட்டேன், பீர் மட்டும் எப்போதாவது அருந்துவேன், பயிற்சி இல்லாமல் இருக்க்வே மாட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
செசில் ரைட் விவியன் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ் உள்ளிட்ட முக்கிய விரர்களுடன் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்