கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

vinoth
ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (13:31 IST)
பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸாகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் ராஜாசாப் என்ற  புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி என்ற நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் மோஷன் போஸ்டர் ரிலீஸாகி கவனம் பெற்றது. படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்துவந்த மாளவிகாவுக்கு இதுதான் முதல் தெலுங்குப் படம். அது குறித்து பேசியுள்ள மாளவிகா மோகனன் “தெலுங்கில் நல்ல படத்தின் மூலம் அறிமுகம் ஆகவேண்டும் என நினைத்தேன். அது ராஜாசாப் மூலமாக நடந்துள்ளது. இது ரொமாண்டிக் காமெடி திரைப்படம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸாகும்” எனக் கூறியுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்