புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கியமான நாளாகும். இது இயேசு உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு முன்னரான வெள்ளிக்கிழமையில் அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுவதாக இது அனுசரிக்கப்படுகிறது.
இத்தினத்தில் கிறிஸ்தவர் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுவர். இவை பொதுவாக இயேசு சிலுவையில் அறையப்படுவதை நினைவுகூரும் வகையிலிருக்கும். கத்தோலிக்கர் இந்நாளில் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப்பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது.
இத்தினமானது தூயவெள்ளி, நீண்ட வெள்ளி, சோக வெள்ளி, பெரிய வெள்ளி என இடத்துக்கிடம் வேறு பெயர்களை கொண்டுள்ளது. இயேசு மரித்தது வெள்ளிக்கிழமையாகும். மேலும் இயேசு மரித்த நாள் கி.பி. 33 ஏப்ரல் 3-ஆம் நாளாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்தினத்தில் பகுதி சந்திரகிரகணமும் ஏற்பட்டுள்ளது. (இயேசு சிலுவையில் உயிர் நீத்தபோது வானம் இருண்டது). தற்போது புனித வெள்ளி ஏப்ரல் 23-க்கும் மே 7-க்குமிடையே ஒரு வெள்ளியில் அனுசரிக்கப்படுகிறது.