கிறிஸ்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 24 ஆம் நாள் நள்ளிரவில் கிறித்தவர் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு நடத்துவர். கத்தோலிக்கர் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர்.
கிறிஸ்து பிறப்புவிழாவிற்கு அடையாளமாக நானல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர் விண்மீன்களுக்கு அடையாளமாக காகதித்தாலான விண்மீன்களை வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்.