தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுமுறைகள்....!

Webdunia
குழந்தைக்கு ஒவ்வொருமுறை பால் கொடுக்கும் முன்பும் சுத்தமான நீர் ஆகாரங்களை அதிகமாக குடிக்க வேண்டும். இதனால் பால் கட்டுதல் போன்ற  பிரச்னைகள் ஏற்படாது. 
தவிர்க்க வேண்டியவை:
 
அதிக காரமான உணவுகளை உட்கொண்டால் குழந்தைகளுக்கு செரிமானப் பிரச்னை ஏற்படும். பிராய்லர் கோழி மற்றும் துரித உணவுகளைக் கட்டாயமாகத்  தவிர்க்கவும்.
 
பசும்பால் பொருள்களில் உள்ள பால் புரதம் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே பால், தயிர், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் உண்பதை தாய்மார்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 
அதிக அளவு காபி குடித்தால் அதிலுள்ள ‘கெஃபைன்’ என்னும் வேதிப்பொருள் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உறக்கத்தைக் கெடுக்கும். கேழ்வரகால் தயாரித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
 
எண்ணெயில் பொரித்த  உணவுகள் குழந்தைளுக்கு மந்ததன்மையை ஏற்படுத்துவதோடு, தாயின் உடல் எடையையும்  கூட்டி விடும். கார்போனைட்டட் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
 
முக்கியமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் முன்னரும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது முக்கியம். ஏனெனில்  குழந்தைகளுக்கு தாய்ப்பாலே உணவும் மருந்தும் என்பதை மறந்துவிட கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்