பெண்ணுக்கும் லிப் லாக் முத்தம் கொடுக்க தயார்; தைரியமாக வெளிப்படுத்திய வித்யா பாலன்

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (17:36 IST)
கதைக்கு தேவைப்பட்டால் பெண்ணுக்கும் லிப் லாக் முத்தம் கொடுக்க தயார் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தைரியமாக தெரிவித்துள்ளார்.


 

 
பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். டர்ட்டி பிக்சர் திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பல ரசிகர்களை பெற்றார். பெண்களை முன்னிறுத்தும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
 
இவர் தனது பேட்டிகளில் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது. வட இந்திடாவில் புகழ் பெற்ற நோ ஃபில்டர் நேகா என்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழக்கம் போல் வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
ஹாலிவுட் நடிகைகளான பெனிலோப் க்ரூஸ், சல்மா ஹயெக், எம்மா ஸ்டோல் ஆகிய மூவரும் தனக்கு பிடித்தவர்கள் என்றும், கதைக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்