ஷாருக்கானின் ’பதான்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (11:50 IST)
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த ’பதான்’ படம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன 
 
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் வெளியானது என்பதும் அதில் ஒரு பாடலில் காவி நிறத்தில்  தீபிகா படுகோனே அணிந்த உடை சர்ச்சைக்குள்ளானது என்பது தெரிந்ததே. 
இந்த நிலையில் ஜனவரி 25ஆம் தேதி ’பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் டிரெய்லரிலும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்