10 ஆண்டுகளுக்கு பிறகு கர்ப்பம்... அனுமனுக்கு நன்றி கூறிய சிரஞ்சீவி!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (18:10 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தெலுங்கில் சிறுத்தை படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். 
 
அதையடுத்து டோலிவுட்டில் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
அப்பாவை போலவே அங்கு நட்சத்திர நடிகராக இளம் வட்டாரத்தை வளைத்துவிட்டார் .
 
பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR என்ற படத்தில் கூட ராம் சரண் சிறப்பாக நடித்து இருந்தார்.
 
இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ராம் சரணின் மனைவி கர்ப்பமாக இருப்பதை சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு அனுமனுக்கு நன்றி கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்