அஜய் தேவ்கன் ஜோடியாகிறார் ரகுல் ப்ரீத்சிங்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (21:49 IST)
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங். டெல்லியைச் சேர்ந்த ரகுல் ப்ரீத்சிங், தெலுங்கின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார். தமிழிலும் மார்க்கெட்டைப் பிடிக்க நினைத்தவருக்கு, எல்லாப் படங்களுமே தோல்வியாக அமைந்தன. 
 
ஆனால், கடைசியாக வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’, தமிழிலும் அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. அதன்பலனாக, செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார் ரகுல் ப்ரீத்சிங்.
 
‘யாரியன்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான ரகுலுக்கு, பிப்ரவரி 9ஆம் தேதி ‘அய்யாரி’ என்ற ஹிந்திப் படம் ரிலீஸாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை, அகில் அலி இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்