அரசால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும்; பாலிவுட் நடிகை சர்ச்சை பேச்சு

ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (14:36 IST)
ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை செய்ததை அடுத்து ஆணுறை விளம்பரங்களை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும் என பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.

 
பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஆணுறை விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் மத்திய அரசு ஆணுறை விளம்பரங்களை தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் விளம்பரம் செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடையை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
ஆணுரை விளம்பரம் விழிப்புணர்வு விளம்பரமாக இருந்தாலும் மிகவும் ஆபாசமாக படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடைக்கு எதிராக பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:-
 
சமூக சேவையாக நினைத்தே நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்தேன். சன்னி லியோன், பிபாஷா பாசு ஆகியோர் நடித்தபோது தடை செய்யாத அரசு நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்து அதுபற்றி அணைவரும் பேசியவுடன் இந்த தடை உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
அரசுக்கு அப்படி என்ன தான் பிரச்சனை. ஆணுறை விளம்பரத்தை நிறுத்தினால் இந்தியாவில் அனைவருக்கும் எய்ட்ஸ் வரும். அரசு என்னை குறி வைத்தே விளம்பரத்திற்கு தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.  
 
மேலும், பிரதமர் மோடி தனக்கு ஆதரவளித்து இந்த முட்டாள்தனமான தடையை நீக்குவார் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்